Latest Movie :

மக்களுக்கான எதிரான வன்முறை - இலங்கைக்கு முதலிடம்

கொழும்பு: உலக அளவில் மக்களுக்கான எதிரான வன்முறைகள் அதிகம் நடக்கும் நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் நாடுகள் வரிசையில் இலங்கைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது.

இலங்கையின் வட பகுதியில், இலங்கைப் படைகள் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையால், பல அப்பாவிப் பொதுமக்கள் தினசரி கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்பட்ட அல்லது காயமடந்த மக்களுக்கு உதவக்கூடிய பொது உதவி நிறுவனங்களுக்கும், ராணுவம் குந்தகம் விளைவித்து வருகிறது.

இலங்கையின் ராணுவ நடவடிக்கைகள் வெற்றி தருவதாக அரசு கூறினாலும் கூட, ஜனவரி மாதம் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை அங்கு மேலும் மோசமடைந்துள்ளது.

உலகில் தற்போது நடைபெற்று வரும் மிக மோசமான போர் நடவடிக்கைகளில் மிக அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்படும் இடமாக இலங்கையின் வடபகுதி காணப்படுகிறது. 

இஸ்ரேலியப் படையினரின் முன்னெடுப்பால் பாதிப்படைந்த காசா நிலப்பரப்பு, அரசுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ள மடகஸ்கார் பகுதி, அரச படைகளுக்கெதிராகப் போர் புரியும் மாலி நாட்டின் டோடக் ஆகியவை வன்முறை அதிகம் நிறைந்த அடுத்த மூன்று பகுதிகள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger