இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், இந்தியா ராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை இனப்படுகொலையை இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது, இலங்கைக்கு ராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது, இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று எம்.பிக்கள் கோஷமிட்டனர்.