Latest Movie :

நேற்று(11-02-09) 34 அப்பாவித் தமிழர்கள் படுகொலை

வன்னியில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது தினசரி நிகழ்வாகி விட்டது. நேற்று நடந்த எறிகணைத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஒரு மருத்துவமனையை இலக்கு வைத்து ராணுவம் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று இலங்கைப் படையினர் சரமாரியான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

நேற்று அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தத் தாக்குதல் நடந்தது. 

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 19 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 61 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேர், போதிய மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏதும் அற்ற நிலையில் உயிரிழந்தனர்.

நீண்ட தூர போக்குவரத்து, சீரற்ற பாதை, மக்கள் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருப்பதால் ஏற்பட்ட நெரிசல், சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் என்பவற்றால் காயமடைந்தோரை மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தாமதமும் காயமடைந்தோர் அநியாயமாக உயிரிழக்க காரணமாகி விட்டது.

இதேவேளையில், தேவிபுரத்தில் இயங்கி வரும் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது நேற்று அதிகாலை 1 முதல் இலங்கைப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் மருத்துவமனைக்கும், உயிர்களுக்கும் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் செய்ய முடியாத நிலையில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றதால் மருத்துவமனைக்குள் இருக்கும் நோயாளிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger