ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை அரசைக் கண்டித்தும், சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரிந்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கை:
இளந்தமிழர் இயக்கம்:
தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்து போராட வேண்டுமென்ற நோக்கில் மாணவர்கள், வழக்கறிஞர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள், மருத்துவர்கள், திரைத் துறையினர், உழவர்கள் என பல்வேறு தரப்பினர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு நீண்ட விவாதத்திற்கு பின் ஒரு இயக்கமாக செயல்பட முடிவெடுக்கப்பட்டு இளந்தமிழர் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழீழ ஆதரபு பரப்புரைப் பயணம்:
இந்த இயக்கத்தின் சார்பில் தமிழீழ மக்கள் மீது நடந்து வரும் இன அழிப்புப் போர் குறித்து மக்களிடையே பரப்புரை மேற்கொள்ள "தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்" நடத்தப்படுகிறது. இப்பயணத்தின் போது தமிழீழ மக்களின் இன்னல்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி, வீதி நாடகங்கள், குறும்படங்கள் திரையிடல் என பல்வேறு வழிகளில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது.
பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி தஞ்சையில் வரும் 25ம் தேதி நடக்கிறது. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்திப் பேசி பயணத்தை தொடக்கி வைக்கின்றனர்.
இந்தப் பயணத்தின் போது "இன விரோத காங்கிரசுக்கு வாக்களிக்கமாட்டேன்" என்று 1 லட்சம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்து இயக்கமும் நடக்கிறது.
பயணத்தின் முடிவில் மார்ச் 6ம் தேதி "இன எழுச்சி மாநாடு" நடக்கிறது. அதில் இக்கையெழுத்துகள் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
பேசி- 9841949462
கோ.ராஜாராம்,
நிர்வாகக் குழு,
பேசி - 9894310997
Email to : elanthamizhar@gmail.com
Thanks To