'கார்பெட்' குண்டுகளை வீசிய விமானத்தை வீழ்த்திய புலிகள்!
விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இலங்கை விமானப்படையின் போர் விமானம், ஆனந்தபுரம், செம்மங்குண்டு ஆகிய இடங்களில் அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்புப் பகுதிகளில் தங்கியுள்ள தமிழ் மக்கள் மீது கார்பெட் குண்டுகளை வீசித் தாக்கிய விமானம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முற்பகல் 11.25 மணியளவில் இரணைப்பாளை என்ற இடத்தில் தாக்குதலுக்குக் கிளம்பிய இலங்கை போர் விமானத்தை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.
அதை எது தாக்கியது என்பது தெரியவில்லை. அப்பகுதி மக்களுக்கும், அது எந்த வகையான விமானம் என்று தெரியவில்லை.
இலங்கையிடம் கிபிர் மற்றும் மிக் -27 ரக விமானங்கள் உள்ளன. இருப்பினும் தாக்கப்பட்டது கிபிர் ரக விமானமாகவே இருக்கக் கூடும் என தெரிகிறது.
இதற்கிடையே, ஆனந்தபுரம், செம்மங்குண்டு பகுதிகளில் அப்பாவித் தமிழர்கள் மீது 'கார்பெட்' குண்டுகளை வீசி இந்த விமானம் வெள்ளிக்கிழமை தாக்குதலில் ஈடுபட்டிருந்தது.
மேலும், பேரழிவை ஏற்படுத்தக் கிளம்பிய போதுதான் விடுதலைப் புலிகள், தரையிலிருந்து வானிலுள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமைத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Labels:
NEWS