ஹாலிவுட் சூப்பர் டூப்பரான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் டிவி கேம்ஷோவில் கலந்து கொள்ளும் வேடத்தில் நடித்திருந்த தேவ் படேல், நிஜமான ஹூ வான்ட்ஸ் டு பி மில்லியனர் டிவி கேம் ஷோவில் பங்கேற்கப் போகிறார். அவருடன் ஸ்லம்டாக் இயக்குநர் டேனிபாயிலும் பங்கேற்கவுள்ளார்.
வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் தெருவோரக் குழந்தைகளுக்கு நிதி சேகரிக்க இந்த நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்கவுள்ளனராம்.
ஹூ வான்ட்ஸ் டு பி மில்லியனர் நிகழ்ச்சியை ஐடிவி1 என்ற டிவி நிறுவனம் நடத்தி வருகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் டேனி பாயில் தனது ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், பதிலளிக்க அளிக்கப்படும் ஒரு சாய்ஸான 'போன் ஏ பிரண்ட்' வாய்ப்பில் ஸ்லம்டாக் மில்லியனர் பட நாயகி பிரீதா பின்டோவை பயன்படுத்த தேவ் படேல் திட்டமிட்டுள்ளாராம். இதன் மூலம் இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் கவனிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பத்து லட்சம் டாலர் நிதியை சேகரிக்க தேவ் படேல் திட்டமிட்டுள்ளார். இந்தப் பணத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த குழந்தைகள் அறக்கட்டளையான சாரிட்டி ரயில்வே சில்ட்ரன் என்ற அமைப்புக்கு வழங்கவுள்ளார். தெருவோரக் குழந்தைகள் பராமரிப்புப் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க டேனி பாயிலும், தேவ் படேலும் ஆர்வத்துடன் இருப்பதாக சன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இருவருக்கும் எப்போது நேரம் கிடைக்கும் என்பதைப் பொறுத்து இந்த நிகழ்ச்சியை சிறப்பு நிகழ்ச்சியாக நடத்த ஐடிவி1 திட்டமிட்டுள்ளது. தற்போது இருவரும் ஆஸ்கர் விருதுகள் பெற்ற பின்னர் மிகவும் பிசியாகியிருப்பதால் அவர்களது நேரத்தைப் பொறுத்து நிகழ்ச்சி ஒளிபரப்பாவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமாம்