ராமநாதபுரம் : சென்னை அண்ணாசாலையில் விளம்பர போர்டு வைக்கவும், போஸ்டர் ஒட்டவும் மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதை பின்பற்றி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் போர்டு, போஸ்டர்களுக்கு அங்குள்ள மாநகராட்சியும் "தினமலர்' இதழ் செய்தி எதிரொலியாக தடை பிறப்பித்துள்ளது.
இதை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளிலும் உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். இது தொடர்பாக நமது நிருபர் குழுவினர் நகராட்சி தலைவர் , துணைத்தலைவர், கமிஷனர் கருத்துக்களை கேட்டனர் . இதோ அவர்களது கருத்துக்கள்:
ராமநாதபுரம்
லலிதகலா( தலைவர்):நகர் பகுதியில் வைக்கும் எந்த பிளக்ஸ் போர்டுகளுக்கும் அனுமதி பெறுவதில்லை. போஸ் டர்களுக்கும் இதே நிலை தான் உள்ளது. தடை விதிப்பது குறித்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் கருத்து கேட்கப் படும்.
ராஜா உசேன் ( துணை தலைவர்): போலீசார் "ஒலி கூம்பு' வைக்க தரப்பட்ட அனுமதியில், ஆனந்தம் ஜவுளி கடையின் பிளக்ஸ் போர்டுகள் தான் அதிகம் உள்ளன. போர்டுகளுக்கு முழுமையான தடை விதித்தால் நன்றாக இருக்கும். இது குறித்து கூட்டத்தில் மீண்டும் கருத்து தெரிவிக்கப்படும்.
பாலகிருஷ் ணன்(கமிஷனர் ) : விழாக்களில் வைக்க கூடிய பிளக்ஸ் போர்டுகளை தவிர்க்க முடியவில்லை. பிளக்ஸ் போர்டு களுக்கு தடை விதிப்பது குறித்து கலெக்டரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
கீழக்கரை
பசீர்அகமது (தலைவர்): கீழக்கரையில் பிளக்ஸ் , போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிப்பதில் உறுதியாக இருக் கிறோம். கவுன் சிலில் முறையான தீர்மானம் நிறை வேற்றி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஜெயினுதீன் (துணை தலைவர்) பிளக்ஸ் போர்டு களுக்கு தடை விதிப்பது குறித்து கவுன்சிலர்கள் கருத்துக்கு பின் முடிவு செய்யப் படும். இதை அமல்படுத்தும் பட்சத்தில் நகர் புதுப்பொலிவு பெரும்.
சுந்தரம்(கமிஷனர்): பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவதை முறையாக பின் பற்றி வருகிறோம். அதே நேரத்தில் தடை விதிக்க வேண்டும் என் றால் கலெக்டரின் ஆலோசனையும் அனுமதியும் தேவை.
பரமக்குடி
கீர்த்திகா (தலைவர்): நகரை தூய்மையாக்கும் பொருட்டு பிளக்ஸ் போர்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து வரும் மன்ற கூட்டத்தில் முன் வைப்போம். கவுன்சிலர்களின் கருத்துபடி தடை குறித்து முடிவு செய்யப்படும்.
பாபுஜி (துணைதலைவர்): பிளக்ஸ், போஸ்டர்கள் மீது தடை விதிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் தனி நபராக முடிவு சொல்வதை விட ஒட்டு மொத்த கவுன்சிலர்களும் இணைந்து குரல் கொடுத்தால் இதற்கு தீர்வு கிடைக்கும்.
பாலகிருஷ்ணன்(கமிஷனர், பொறுப்பு ) : நகரில் பிளக்ஸ் போர்டுகள்,போஸ்டர்களுக்கு தடை விதிப்பது குறித்து கலெக்டரிடம் கலந்து ஆலோசிக்கப்படும்.
ராமேஸ்வரம்
ஜலீல் (தலைவர்): பிளக்ஸ் போர்டு, போஸ் டர்கள் மீது அவ் வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். தடை குறித்து மன்ற உறுப்பினர் கள் அனுமதி பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படும். இதற்காக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம் .
ராஜாமணி (துணை தலைவர்): ஆன்மீக ஸ்தலங் களுக்கு அழகு முக்கியம் என் பதால் போஸ்டர், பிளக்ஸ் மீது தடை விதிக்க கூட்டத் தில் வலியுறுத்தப் படும்.
போஸ் (கமிஷனர்): நகர் மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தும் பட்சத்தில் கலெக் டரின் அனுமதி பெற்று பிளக்ஸ் போர்டுகள், போஸ்டர்கள் மீதான தடை குறித்து முடிவு செய்யப்படும்.
நன்றி