Latest Movie :

இந்த ஆண்டு 81 அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை-81 us soldiers committed suicide this year


அமெரிக்க ராணுவத்தில் இந்த ஆண்டு மட்டும் 81 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியி்ட்டுள்ளது.

கடந்த 2008ல் தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை வெறும் 31 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில் இதுவரை 81 அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து 1980க்கு பின் இந்த ஆண்டு தான் அதிக அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக் தெரிகிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போரில் பங்கேற்ற பின்னர் தான் வீரர்களிடம் இந்த தற்கொலை பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பணப் பற்றாக்குறை, நிதி நெருக்கடி, மனைவியை விட்டுப் பிரிந்தது, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவையும் இந்த தற்கொலை அதிகரிப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க வீரர்களின் தற்கொலை அதிகரிப்பு குறித்து அமெரிக்க ராணுவத்தின் துணைத் தளபதி பீட்டர் சியாரெலி கூறுகையில், தற்கொலைத் தடுப்பு திட்டங்கள் உரிய முறையில் பலன் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஏன் அது தோல்வி அடைந்தது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்றார்.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger