மதுரையில் வெயிலில் வாடும் போலீசாருக்கு தொப்பிகள், கூலிங் கிளாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
மதுரை கோ.புதூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் நாகராஜன் சமீபத்தில் நீதிமன்ற பணிக்காக சென்ற போது அங்கு அனாதையாக கிடந்த பை ஒன்றை கண்டெடுத்தார்.
அதில் 9 ஏடிஎம் கார்டுகள், ஒரு சாவி, 12 கணக்குப் புத்தகங்கள் ஆகியவை இருந்தன. இதை அவர் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். விசாரணையில், பை அண்ணாநகர் ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் முரளிதரன் என்பவருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நாகராஜனுக்கு காவல்துறை ஆணையர் நந்தபாலன் பரிசு வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பொருட்களைக் கண்டெடுத்து ஒப்படைப்பவர்களுக்கு ஏற்கனவே ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் பொருட்களை ஒப்படைத்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இதற்காக தனியாக கவுன்சிலிங் நடத்தப்படும். வெயிலில் பணியாற்றும் காவலர்களுக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மதுரையில் பேருந்து எரிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 9 பேரையும் சேர்த்து இதுவரை 160 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டே கால் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. மதுரையில் 979 கிரிமினல்களின் உள்ளனர். இவர்களின் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு, அவர்களை போலீஸ் அதிகாரிகள் குழு மற்றும் தனிப்படையினர் கண்காணித்து வருகின்றனர்.
மதுரையில் ஏற்கனவே, 35 சிக்னல்கள் உள்ளன. இது 44ஆக உயர்த்தப்படும் என்றார்.