
முல்லைத் தீவி்ல் இன்று காலை 11.25 மணிக்கு குண்டு வீச வந்த இந்த விமானத்தை புலிகள் SAM ((Shoulder aided missiles) ரக ஏவுகணையைக் கொண்டு சுட்டு வீழ்த்தியதாகத் தெரிகிறது.
இரணைப்பாளை என்ற இடத்தில் வைத்து இந்த விமானத்தை புலிகள் தாக்கினர். இதில் அந்த விமானம் வானிலேயே வெடித்துச் சிதறியது.
புலிகளிடம் உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் ஒலியின வேகத்தில் செல்லும் கிபிர் ரக விமானங்களை வீழ்த்த முடியாது என்று கருதப்பட்டு வந்த நிலையில் இந்த விமானத்தை வீழ்த்தியுள்ளனர் புலிகள்.
இந்த கிபிர் ரக விமானங்களை இஸ்ரேல் தான் இலங்கைக்கு வழங்கியது.