அது பிரபாகரன் உடல் தானா?-சந்தேகங்கள் (Is-it-prabhakarans-body?)
இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன.
கடந்த 2004ம் ஆண்டு எடுக்கப்பட்ட பிரபாகரனின் படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் இது பிரபாகரன் தானா என்பதே சந்தேகமாக உள்ளதாக பலர் கூறுகின்றனர்.
2004ம் ஆண்டு வெளியான படத்தில் இருப்பதை விட பிரபாகரன் இப்போது வெளியான வீடியோவில் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி?. அப்போது அவரது முகத்தில் இருந்த சுருக்கங்கள் தற்போது இல்லையே?.
பாதுகாப்புப் படைகளால் சூழப்பட்ட நிலையில் அவர் முகச்சவரம் செய்து கொண்டிருப்பாரா?.
தப்பிச் செல்லும்போதும் கூட தனது இயக்க உடையில், அடையாள அட்டையுடனா இருந்திருப்பார்?
வேனில் தப்பியபோது ராக்கெட் மூலம் தாக்கியதில் உடல் எரிந்து போனதாக கூறப்பட்டதே. ஆனால், பிரபாகரனின் உடலில் தீக் காயமே இல்லையே?.
இறந்து பல மணி நேரம் ஆகியும் நீருக்குள் கிடந்த அவரது உடலில் வீக்கமே இல்லையே. வீடியோவில் காட்டப்படுவதைப் போல இறந்து 24 மணி நேரம் ஆனவரின் தலையை பொம்மையை போல் இப்படி அசைக்க முடியாது.
பிரபாகரனின் முகம் போல ஒரு முகமூடியை தயார் செய்து வேறு உடலில் ஒட்டிவிட்டு அதை மறைக்க யூனிபார்மும், தலையில் துணியும், பாதி உடலும் என்று காட்டுகிறார்கள்.
பிரபாகரனைச் சுற்றி எப்போதும் குறைந்தது 200க்கும் மேற்பட்ட தற்கொலை படையான கரும்புலிகள் இருப்பது வழக்கம். அப்படி இருக்க பிரபாகரனின் உடல் அருகே வேறு எந்த நபரின் உடலும் இருந்ததாக காண்பிக்கப்படவில்லை.
கடந்த 89ம் ஆண்டில் இதேபோல் இலங்கை அரசால் இறந்ததாக கூறப்பட்ட பிரபாகரன், 1990 இறுதியில் மீண்டும் தோன்றினார். அதே போல தேவையான நேரத்தில் பிரபாகரன் மீண்டும் தோன்றுவார் என்கின்றனர்.
Labels:
NEWS