Latest Movie :

இலங்கையால் ஊடக சுதந்திரத்துக்கு கறும்புள்ளி: மக்கள் தொலைக்காட்சி

 "இலங்கை ராணுவம் விதித்துள்ள தடை, உலக அளவில் கருத்து சுதந்திரத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் மிகப்பெரிய கரும்புள்ளி என்று மக்கள் தொலைக்காட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலர் சிவக்குமார் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது முதல் எல்லா விதத்திலும் நடுநிலையாக செயல்பட்டு, ஊடக நெறிமுறைகள் மீறாமல் உலகத் தமிழர்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பான உண்மை நிலையை தொடர்நது எடுத்துரைப்பதால், இலங்கை ராணுவம் அந்நாட்டில் மக்கள் தொலைக்காட்சியை ஒளிபரப்ப முழுவதுமாக தடை விதித்துள்ளது.

இலங்கை ராணுவம் வித்ததுள்ள இந்தத் தடை, உலக அளவில் கருத்து சுதந்திரத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் மிகப்பெரிய கரும்புள்ளி ஆகும்.

ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை நெறித்து வரும் இலங்கை அரசின் சர்வாதிகார போக்கையே இந்த செயல் காட்டுகிறது.

ஏற்கெனவே, பி.பி.சி உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் சிலர் கொலை செய்யபட்டுள்ளனர்.

ஊடகங்கள் மீதான தாக்குதல்களும், அதனைத் தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் இலங்கை அரசு ஜனநாயக பாதையை விட்டு தடம் மாறி செல்கிறது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

இலங்கை அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் தலைவர்கள், சக ஊடகவியளாலர்கள், பொதுமக்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கு துணை நிற்க வேண்டும் என்று தலைமை செயல் அலுவலர் சிவக்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger