'சென்னையில் ரவிக்குமார் என்கிற காவலர் தீக்குளிக்க முயற்சி! காயங்களுடன் காப்பாற்றப்பட்டார்... பொன்னேரியில் குப்புசாமி என்கிற ரிட்டயர்டு எஸ்.ஐ. ஒருவர் தீக்குளிக்க முயற்சி! திருநெல்வேலியில் ரிட்டயர்டு தலைமைக்காவலர் நாராயணசாமி உண்ணாவிரதம்!
மார்ச் 3... சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகில் திடீர் உண்ணாவிரதம்...
சென்னையிலுள்ள பல்வேறு காவலர் குடியிருப்புகளைச் சேர்ந்த சுமார் ஐந்நூறு பெண்கள், தங்கள் குழந்தைகளைச் சுமந்தபடி ஊர்வலம். வக்கீல்களை எதிர்த்து கோஷங்கள் முழங்கின....'
என்ன இதெல்லாம் என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? வக்கீல்களுக்கும் காவல்
துறைக்கும் அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறையை அடுத்து அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகள்தான்!
இந்நிலையில், தமிழக மக்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம். தமிழக அரசு உண்மையில் யார் பக்கம் நிற்கிறது?' என்பதுதான் அது!
இது ஒருபுறம் இருக்க, சென்னை நீதிமன்ற வளாகத்தில் நடந்த விவகாரங்கள் பற்றி விசாரிக்க நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்திருக்கும் நிலையில், காக்கிக்கும் கறுப்பு கோட்டுக்குமான 'டக் ஆஃப் வார்' நிற்பதாகத் தெரியவில்லை!
இந்நிலையில், காவலர் நல சங்கம் என்கிற புதிய சங்கமும் உதித்திருக்கிறது. இதைத் தொடங்கியிருக்கும் முன்னாள் கூடுதல் எஸ்.பி-யான அந்தோணிசாமி (எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே இவர் போலீஸ் சங்கம் ஆரம்பித்தவராம்) நம்மிடம்,
''வழக்கறிஞர்கள் என்றால், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னது சுப்ரீம் கோர்ட். முதல் கட்ட டிரான்ஸ்ஃபர் நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். ஆனால், அதே சுப்ரீம் கோர்ட் சொன்னபடி வழக்கறிஞர்கள் மீண்டும் பணிக்குச் சென்றார்களா? அப்படியென்றால், வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டையும் விட உயர்ந்தவர்களா? அவர்களை நம்பி வழக்குகளைக் கொடுத்த அப்பாவி மக்கள் எங்கே போவார்கள்? இனிமேலும், வழக்கறிஞர்கள் குறித்து வெறும் 'அறிவுரை'யை மட்டும் தருவதை சுப்ரீம் கோர்ட் தவிர்த்து, அவர்களின் அராஜகங்களைக் கண்டிக்க வேண்டும். கடந்த 8 நாட்களாக உயர் நீதிமன்ற சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்தபடி போராட்டம் என்கிற பெயரில் போலீ ஸாரையும் அவர்களின் குடும்பத்தினரையும் மைக் கட்டி, திட்டி வருகிறார்கள் வழக் கறிஞர்கள். சட்டத்தை மதிக்கவேண்டிய அவர்களே அத்துமீறி நடக்கிறார்கள். இனி நாங்கள் அவர்களின் அத்துமீறல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை! எங்கள் பின்னால், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. சங்கம் ஆரம் பிக்கும் விஷயத்தில் பிரிந்து கிடந்த எங்களை ஒன்றுபடுத்தி இருக்கிறார்கள் வழக்கறிஞர்கள். எங்களின் முழு பலத்தை வெளியுலகுக்குக் காட்டுவதற்காகத்தான் எங்கள் தரப்பிலான போராட்டம். உயரதி காரிகள் கேட்டுக்கொண்டதால், எங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டுக் கலைகிறோம். தொடர்ந்து வழக்கறிஞர்கள் எங்களைச் சீண்டினால், அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அறிவிப்போம்!'' என்றார் அந்தோணிசாமி. more