இலங்கை ராணுவத்தின் வெறித் தாக்குதல் நின்றபாடில்லை. வன்னியில் கடந்த 2 நாட்களில் நடந்த கொடும் தாக்குதலில் 83 தமிழர்கள் படுகொலையாகியுள்ளனர். 226 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் வியாழக்கிழமை இலங்கைப் படையினர் ஆர்ட்டிலரி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 73 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 164 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட மாத்தளன், அம்பலவன்பொக்கனை, வலைஞர்மடம் பகுதிகளில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இடைவிடாத எறிகணைத் தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 123-க்கும் அதிகமானோர் காயமடைந்ததுள்ளனர்.
அதிகாலையில் நடந்த தாக்குதல் என்பதால் இருளில் தப்பிச் செல்ல முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
அதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரட்டைவாய்க்கால்ப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா படையினர் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 62 பேர் காயமடைந்துள்ளனர்.