இந்தியாவில் முதல் முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட எருமைக் கன்றுக் குட்டி நிமோனியா வந்து இறந்து போய் விட்டது.
கடந்த 1996ம் ஆண்டு டோலி என்ற ஆட்டுக் குட்டி குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய விஞ்ஞானிகள் குளோனிங் மூலம் எருமை மாட்டின் கன்றுக் குட்டியை உருவாக்கி சாதனை படைத்தனர்.
இது ஆண் கன்றுக் குட்டியாகும். ஹரியானா மாநிலம் கர்னூல் நகரில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி பண்ணையில், கடந்த 6-ந் தேதி இந்தக் கன்றுக் குட்டி பிறந்தது.
ஆனால் 2 நாட்களுக்கு முன்பு அது இறந்து போய் விட்டது. நிமோனியா தாக்கி அது இறந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி இந்திய விஞ்ஞானிகள் கூறுகையில், டோலி ஆட்டுக்குட்டியை உருவாக்கிய தொழில் நுட்பத்தை விட அதி நவீன தொழில் நுட்பத்தை நாங்கள் பயன் படுத்தினோம்.
என்றாலும் நாங்கள் உருவாக்கிய குட்டியின் இருதயத்தில் நோய் கிருமிகள் அதிகமாக தாக்கியதால், அந்த குட்டி இறந்து விட்டது.
இன்னும் இரண்டு குளோனிங் கன்று குட்டிகள், ரசாயன ஆய்வு நிலையத்தில் வளர்ந்து வருகின்றன. அவை மே அல்லது ஜுன் மாதம் முழு வளர்ச்சி அடைந்து விடும்ய என்று தெரிவித்தனர்.
இந்த குளோனிங் கன்றுக் குட்டியை சிங்க்லா, மானிக், செளகான், பால்டா, ஷா, ஜார்ஜ் ஆகிய ஆறு விஞ்ஞானிகள் இணைந்த குழு உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.