சிறிலங்கா படையினரின் கொடூர எறிகணைத் தாக்குதல்களில் இன அழிப்புக்கு உள்ளாகி வரும் தமிழ் மக்களை நினைவு கூர்ந்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
சிட்னியில் உள்ள மேலி பகுதியில் உள்ள பர்ரமட்டா என்ற இடத்தில் நடந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் தமிழ் மக்களின் இன அழிப்பை எதிர்த்து தீக்குளித்து தீக்குளித்து இறந்த முத்துக்குமார் உள்ளிட்டோரை நினைவு கூர்ந்ததுடன் அவர்களுக்கு வணக்கத்தினையும் செலுத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர் மாத்தளை சோமு, தமிழீழ மக்களின் அபிலாஷைகளை விளக்கி உரையாற்றினார்.
அத்துடன், சிட்னி தமிழ் மன்றத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் தமிழ் இளைஞர்களும் வன்னி அவலத்தை உலக மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் உரையாற்றினர்.
வன்னி அவலத்தை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டும் முகமாக இங்கு ஒளிப்படக் காட்சியும் காண்பிக்கப்பட்டது.