தமிழ் நடிகைகள் அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர்கள் பரத், சுந்தர்.சி உள்பட 71 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரபல தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், பழம்பெரும் இயக்குநர் பி மாதவன் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
இது குறித்து அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கி சிறப்பு செய்து வருகிறது. விருது பெறும் ஒவ்வொரு வருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கலைமாமணி விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரைகளை ஏற்று, விருது பெறுபவர்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதன் விவரம்:
அபிராமி ராமநாதன் - திரைப்பட தயாரிப்பாளர்
சேரன் - திரைப்பட இயக்குனர்
சுந்தர்.சி - நடிகர்
பரத் - நடிகர்
நயன்தாரா - நடிகை
அசின் - நடிகை
மீரா ஜாஸ்மின் - நடிகை
பசுபதி - குணசித்திர நடிகர்
ஷோபனா - குணசித்திர நடிகை
வையாபுரி - நகைச்சுவை நடிகர்
சரோஜாதேவி - பழம்பெரும் நடிகை
வேதம்புதிது கண்ணன் - வசனகர்த்தா
ஹாரிஸ் ஜெயராஜ் - இசையமைப்பாளர்
ஆர்.டி.ராஜசேகர் - ஒளிப்பதிவாளர்
பி.கிருஷ்ணமூர்த்தி - கலை இயக்குனர்
சித்ரா சுவாமிநாதன் - புகைப்பட கலைஞர்
நவீனன் - பத்திரிகையாளர்
சீனிவாசன் - ஓவிய கலைஞர்
சுந்தர்.கே.விஜயன் - சின்னத்திரை இயக்குனர்
திருச்செல்வம் - சின்னத்திரை இயக்குனர்
பாஸ்கர் சக்தி - வசனகர்த்தா
அபிஷேக் - சின்னத்திரை நடிகர்
அனுஹாசன் - சின்னத்திரை நடிகை
அமர சிகாமணி - சின்னத்திரை
உள்ளிட்ட 71 பேருக்கும் ஆளுநர் மற்றும் முதல்வர் கருணாநிதி இந்த விருதுகளை வழங்குவார்கள். விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.