Latest Movie :

இலங்கை கொடுமை-ஐ.நா. அலுவலகம் முன் இலங்கைத் தமிழ் வாலிபர் தீக்குளித்தார்.

Murukathasan
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன் இலங்கைத் தமிழ் வாலிபர் தீக்குளித்தார்.

இங்கிலாந்தில் வசித்து வந்த முருகதாசன் (26) நேற்றிரவு 8.20 மணியளவில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. அலுவலகம் எதிரே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் சில நிமிடங்களிலேயே அவர் அலறித் துடித்து பலியானார்.

தனது தற்கொலை தொடர்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் 7 பக்க கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். தீக்குளித்த இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவில் ஒரு பையில் இந்தக் கடிதத்தை சுவிஸ் போலீசார் கையகப்படுத்தினர்.

மேலும் முன்னதாக இந்தக் கடிதத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள பல தமிழ் பத்திரிக்கையாளர்களும் அனுப்பி வைத்துள்ளார். முருகதாசன் மரணித்த பின் இந்தக் கடிதங்கள் அவர்களுக்குக் கிடைத்தன.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள சாரம்சம்: இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் சொல்ல முடியாத கொடுமைகளை உலக சமுதாயம் மனித நேய கண்ணோட்டத்துடன் பார்க்க எனது உடலிலும், இதயத்திலும் ஆன்மாவிலும் எரியும் இந்தத் தீயின் நாக்குகள் உதவும் என நம்புகிறேன்.

இந்த நிமிடம் வரை இலங்கையில் அந் நாட்டு அரசாங்கம் நடத்தி வரும் மாபெரும் கொடுமைகளை சர்வதேச சமுதாயம் அமைதியாக அங்கீகரித்துக் கொண்டே உள்ளது. அங்கு நடப்பது அரசு தீவிரவாதம் என்று கூறப்பட்டுள்ளது.

முருகதாசனின் குடும்பத்தாரை அடையாளம் காணும் பணியில் சுவிஸ், இங்கிலாந்து போலீசார் இறங்கியுள்ளனர்.

முருகதீசன் தீக்குளித்ததை 3 பொது மக்களும் ஒரு போலீஸ் அதிகாரியும் நேரில் பார்த்துள்ளனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் முருகதாசன் பற்றி எரிய ஆரம்பித்துவிட்டார்.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger