ரஹ்மான், அனில் கபூர் மீது வழக்கு!
இந்தியாவின் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை அவமதித்துவிட்டதாக, ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பணிபுரிந்த ஏ.ஆர்.ரஹ்மான், அனில் கபூர் ஆகியோருக்கு எதிராக பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்திய குடிசைவாழ் பகுதியினர் இணை செயற்குழுவின் பொதுச் செயலாளரான தபேஷ்வர் விஷ்வகர்மா என்பவர் இதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தின் மூலமாக ரஹ்மானும், அனில் கபூரும், குடிசைவாசிகளை 'குடிசைவாழ் நாய்கள்', 'இந்திய நாய்கள்' என்றெல்லாம் கேவலமாகப் பேசியுள்ளனர். இவ்விருவருக்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது
மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தக் குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்று கூறி, இம்மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
http://thatstamil.oneindia.in/movies/specials/2009/01/22-slumdog-is-now-barking-against-its-artists.html
Labels:
ரஹ்மான்-Slumdog Millionaire